• Nov 01 2025

கானா வினோத் பாட, மேல் ஷர்ட்டை கழட்டி திவாகர் செய்த வீம்பு.? நோஸ் கட்டான சம்பவம்

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

பிக் பாஸ்  நிகழ்ச்சியில் 24வது  நாளான  இன்று  முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில்  கானா வினோத்தும்  திவாகரனும் செய்யும் அலப்பறைகள்  ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது.

கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். அதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா,  ஆதிரை ஆகியோர் வெளியேற,  16 பேர் பிக் பாஸ் வீட்டில் தற்போது காணப்படுகின்றனர்.

இதைத்தொடர்ந்து வைல்டு கார்டு என்ட்ரியாக பிரஜின் – சாண்ட்ரா ஜோடி சென்றுள்ளனர்.. அவர்கள் சரி உள்ளே சென்று சிறந்த கன்டென்ட் கொடுப்பார்களா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 


இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில்   வழக்கம் போல திவாகர் கேமரா முன்பு  performance செய்ய முற்படுகின்றார்.  ஆனால் அதை தடுக்கும் வகையில் கானா வினோத் பாட்டு பாடுகின்றார். 

இதனால் மீண்டும்  திவாகர் துஷாருடன் நடிக்க முற்பட, வினோத் உரத்த குரலில் பாட்டு பாடுகிறார். இதனால் இதனை விக்கியிடம் திவாகர் சொல்ல, நீங்க ரெண்டு பேரும் வீம்புக்கு என்ன என்டாலும் பண்ணுங்க.. நாங்க அதுல வர மாட்டோம் என்று சொல்லுகிறார் விக்கி.

இதில் கடுப்பான திவாகர் மேல் ஷர்ட்டை கழட்டிவிட்டு மீண்டும் பேச, வினோத் மீண்டும் கத்தி பாடுகிறார். இதனால் பிரவீனிடம் இதனை சொல்ல, அவர் உரிமை அவர் பாடுகிறார் என திவாகருக்கு நோஸ் கட் கொடுக்கிறார். 

Advertisement

Advertisement