• Mar 28 2024

அதிகரிக்கும் வெள்ளித்திரை நடிகர்களின் மோசடி;இயக்குநர்கள் பெரும் நெருக்கடியில்! அம்பலமாக்கினார் பிரபல தயாரிப்பாளர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக மக்கள் தாம் முன்னேறுவதற்கு முக்கியமான துறையாக சினிமாத்துறையை தேர்வு செய்து வருகின்றனர்.அவ்வாறு வெள்ளித்திரை சின்னத்திரை ஆகியவற்றின் மூலம் மட்டுமல்லாது யூடியூப் போன்ற சமூகவலைத்தளங்களின“ மூலம் தமது திறமைகளை வெளிக்காட்டியும் சம்பாதித்து வருகின்றனர்.

பொதுவாக வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகர்கள் சமீபகாலமாக தங்களது சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் குறித்த ஒரு குற்றச்சாட்டை பிரபல தயாரிப்பாளர் கே.ராஜான் முன் வைத்துள்ளார்.


அதாவது தற்போதைய சூழலில் நடிகர்கள் தங்களது சம்பளத்தை கூட்டுவதோடு மட்டுமல்லாது கொள்ளை அடிக்கின்றனர்.தலையில் வைக்கிற விஃக் சாதாராணமாக 12000 ரூபா -15000 ரூபா வரை இருக்கும் ஆனால். 25000 ஆயிரம் என்று சொல்லி வாங்கிறாங்க. அதே போல மேக்கப்மேனுக்கு சம்பளம் 2000 என்று வாங்கிறாங்க ஆனால் 1000ம் ரூபா தான் குடுக்கிறாங்க.

அது மட்டுமில்லாமல் ஷுட்டிங் வாறதுக்க நாம தான் வண்டி அனுப்பிறோம். ஆனால் பெற்றோல் டீசல் செலவு என்று பொய் சொல்லி வாங்கிறாங்க. சில நடிகர்கள் சத்தியராஜ் விஜயகுமார் போன்ற நடிகர்கள் வாங்கிறதில்லை. ஆனால் 90 வீதமானவர்கள் வாங்கிறாங்க. டேட் கொடுத்த டைம்ல நடிக்க வரமாட்டாங்க.இதனால் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தான் நஷ்டம்.


முதல்ல எல்லாம் சொன்ன டைம்ல படம் எடுத்து முடிச்சிருவாங்க ஆனால் இப்போ 30 நாள் ஷுட்டிங் என்றால் 40 நாள் வைச்சு எடுக்கிறாங்க. இது தான் திமிரு என்று சொல்லுவாங்க.அதே மாதிரி படத்தில் நிறைய பேர் கூட்டமா நடிச்சா அவங்களுக்கும் சம்பளம் கொடுப்பாங்க. எங்க கிட்ட நிறையத்தான் வாங்குவாங்க.ஆனால் அவங்களுக்கு கொஞ்சம் தான் கொடுப்பாங்க. கேட்டால் என்னோட தொழிலாளர்களுக்கு வேலை கொடுங்க என்று சொல்லுவாங்க.தயாரிப்பாளர் கிட்ட இருந்தால் தானே கொடுக்கிறதுக்கு.இப்படி நிறைய மோசடி நடந்திட்டு இருக்கு என்றுவெளிப்படையாகக் கூறியிருக்கிறார்

Advertisement

Advertisement

Advertisement