• Apr 18 2024

மலேசியாவில் முன்னிலையில் இருப்பது வாரிசா..? துணிவா..? வெளியானது விபரம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகத் திகழ்ந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருக்குமே கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அஜித்-விஜய் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தாலும் அவர்களின் ரசிகர்களுக்கு இடையில் யார் பெரிது என்ற வாதம் அடிக்கடி இடம்பெற்று வருவது வழமை.


அந்தவகையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரசிகர்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் 'வாரிசு' படமும் அஜித்தின் 'துணிவு' திரைப்படமும் வெளியாகி இருந்தது.


இந்த இரு திரைப்படங்களில் எந்த திரைப்படம் உண்மையான பொங்கல் வின்னர் என்பதைப் பற்றி படங்கள் வெளிவந்த நாளில் இருந்து பல செய்திகள் தாறுமாறாக வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன. இருப்பினும் இந்த இரு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மலேஷியாவில் எந்த திரைப்படம் இதுவரை அதிகம் வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


அதன்படி அஜித்தின் துணிவு திரைப்படமானது இதுவரை ரூ. 16 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆனால் விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ. 18 கோடி வசூல் செய்து துணிவை விட சற்று முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement