• Apr 19 2024

'கைதி 2' படத்தில் ரோலக்ஸ் ரேஞ்சுக்கு வில்லனாகும் முன்னணி ஹீரோ- அடடே இவர் சூப்பரான நடிகராச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கவர்ந்த இயக்குநர் தான் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய கைதி', 'மாஸ்டர்', மற்றும் சமீபத்தில் வெளியான 'விக்ரம்' ஆகிய படங்கள் வேற லெவலுக்கு வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

அதிலும் குறிப்பாக நடிகர் கமல்ஹாசனை வைத்து லோகேஷ் இயக்கிய, 'விக்ரம்' திரைப்படம் 140 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு,450 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. மேலும் கமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 100 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.


இதனை அடுத்து தளபதி விஜய்யை வைத்து தனது 67வது படத்தை இயக்க தயாராகவுள்ளார்.  இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கெளதம் மேனன், விஷால், நிவின் பாலி, மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.


பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் படங்களில் ஹீரோக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்குமோ அதே அளவிற்கு வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கைதி 2 படத்தில், ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் ராகவா லாரன்ஸ் அடுத்த ரோலக்ஸ் போன்ற மிகவும் தனித்துவம் வாய்ந்த வில்லன் கதாபாத்திரத்தில் கலக்க உள்ளாராம். இது குறித்த பேச்சுவார்த்தை லாரன்ஸ் இடம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் இருந்தே அடுத்த சம்பவம் செய்ய லோகேஷ் கனகராஜ் தயாராகிவிட்டார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement