• Mar 28 2023

நடு ரோட்டில் காதலியை அடித்த காதலன்.. ஓடி வந்து தடுத்து நிறுத்தி மன்னிப்பு கேட்க வைத்த பிரபல நடிகர்.. வைரலாகும் வீடியோ..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

தெலுங்கில் பிரபல நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நாக சவுர்யா. இவர் சமீபத்தில் செய்த் ஒரு நல்ல செயலினைத் தொடர்ந்து அவர் ரீல் ஹீரோ மட்டும் அல்ல நிஜத்திலும் ஹீரோ என ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.


அதாவது ஹைதராபாத்தின் பிசியான சாலைகளில் ஒன்றில் வாலிபர் ஒருவர் தனது காதலியான இளம் பெண்ணை அடித்திருக்கிறார். இதை பார்த்த நாக சவுர்யா ஓடி வந்து அதை தடுத்து நிறுத்தினார். மேலும் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்குமாறு வாலிபரை வற்புறுத்தினார். ஆனால் அதற்கு அந்த வாலிபரோ கோபப்பட்டு, அவள் என் காதலி என்று கூறி மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார்.


இதற்கு நாக சவுரியா காதலியாக இருந்தாலும் அடிப்பது தவறு என்றார். அத்தோடு அந்த வாலிபரின் கையை பிடித்து தடுத்து நிறுத்தி மன்னிப்பு கேட்குமாறு மேலும் மேலும் வலியுறுத்தினார் நாக சவுர்யா. இதை பார்த்த அந்த பெண் உடனே தன் காதலரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி விட்டது.


அதுமட்டுமல்லாது "யார் யாரை அடித்தால் நமக்கென்னவென்று செல்லாமல் சாலையில் இறங்கி அந்த வாலிபரை கண்டித்த நாக சவுர்யா நிஜ ஹீரோ. எத்தனை பிரபலங்கள் இப்படி செய்வார்கள். நீங்கள் நல்லா இருக்க வேண்டும் உங்கள் அம்மா நல்லபடியாக வளர்த்திருக்கிறார். பல காலம் கழித்து ஒரு நல்ல மனிதரை பார்க்கிறோம். ஒரு நடிகர் பொது இடத்தில் இப்படி நியாயம் கேட்பது நல்ல விஷயம்" எனக் கூறி அவரை பாராட்டியும் வருகின்றார்கள்.


Advertisement

Advertisement

Advertisement