• Apr 19 2024

மிர்ச்சி சிவாவின் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் முக்கிய அப்டேட்…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கமெடி ஹீரோவாக கலக்கி வருபர் தான் மிர்ச்சி சிவா.இவர் நடிகராக வருவதற்கு முன்னரே ரேடியோ மிர்ச்சியில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றினார்.

காமெடி திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் வெங்கட் பிரபு வின் சென்னை 600028 மற்றும் சரோஜா திரைப்படம் மூலம் பிரபலமானார்.

இவ்வாறுஇருக்கையில் மிர்ச்சி சிவா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மிர்ச்சி சிவா தமிழின் சிறந்த காமெடி படங்கள் கொடுத்து வருகிறார். அவருடைய டைமிங் காமெடிக்கென்றே ரசிகர்கள் ஏராளம்.

மேலும் மிர்ச்சி சிவா கடைசியாக ராம் பாலா இயக்கத்தில் இடியட் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் மிர்ச்சி சிவா நடிப்பில் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் என்ற புதிய படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

விக்னேஷ் ஷா என்பவர் படத்தை இயக்குகின்றார். குமார் என்பவர் தயாரிக்கிறார். அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

எனினும் தற்போது 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யா இந்தப் பாடலை வெளியிட்டுள்ளார். சோறு தான் முக்கியம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. அந்தோணி தாசன் இந்த பாடலை பாடியுள்ளார். இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

https://www.youtube.com/embed/NrGhWG5Emwc


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement