• Jun 03 2023

நான் சிங்கிளா இருக்கிறேனா அப்பிடி ஒன்றும் இல்லை- நடிகர் வினய்க்கு திருமணமாம்?- எப்போது தெரியுமா?

stella / 1 week ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் உன்னாலே உன்னாலே என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் வினய்.இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள நெக்கட்டிவ் ரோலில் அதிகம் நடித்து வருகின்றார்.


மேலும் வினய் நடிகை விமலா ராமன் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்தது. இவர்கள் இருவரும் டேட்டிங் செய்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.


இந்த நிலையில் விஜய் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் நீங்க ஏன் சிங்கிளாக இருக்கிறீங்க என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் நான் சிங்கிளாக இல்லை. ஆனால் இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அவர் விமலா ராமனுடன் தான் லிவிங் டுகெதர் லைப்பில் வசித்து வருகின்றார்கள் என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement