• Apr 24 2024

நான் மனைவி மட்டும் தான் விஷாலைக் காதலிக்கவில்லை- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அபிநயா

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக லத்தி என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தினை இயக்குநர் ராணா இயக்கியுள்ளதோடு விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுஜைனா நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது 45 வயதாகும் விஷால் பிரபல நடிகை அபிநயாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவ ஆரம்பித்தன. முன்னதாக, நடிகை வரலட்சுமி சரத்குமாருடன் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது. அவருக்கும் தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் வெளியிடப்படாத காரணங்களால் முறித்துக் கொண்டார்.


இந்த நிலையில் விஷால் நடிகை அகிநயாவைக் காதலிப்பதாக தகவல் பரவி வந்தது. இது குறித்து அபிநயா தரப்பிலிருந்து தற்பொழுது விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் விஷாலுக்கு மனைவியாக  அபிநயா நடித்திருப்பதாகவும் அதற்காககத் தான் போட்டோ ஷுட் நடத்தப்பட்டது.

எனவே புதிய வதந்தியைப் பரப்ப வேண்டாம் என அபிநயா தரப்பிலிருந்து கூறப்படுகின்றது.இதன் மூலம் விஷாலும் அபிநயாவும் காதலித்து வருவதாக கூறப்படும் விடயம் வதந்தி என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு அபிநயா சசிகுமாரின் 'நாடோடிகள்' படத்தின் மூலம் அறிமுகமானர்.

 செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுள்ள அபிநயா, 'ஆயிரத்தில் ஒருவன்', 'ஈசன்', 'வீரம்', 'தனி ஒருவன்', 'ஷமிதாப்', 'விழித்திரு', ' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சீதா ராமம்'. விஷாலுடன் ‘பூஜை’ படத்திலும் நடித்துள்ளார்.




















Advertisement

Advertisement

Advertisement