• Apr 20 2024

"நான் பணத்திற்காக வரவில்லை, உங்கள் மனதிற்காக தான் வருகிறேன்"-குக்வித் கோமாளி செட்டில் பேசிய புகழ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் புகழ். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபல்யமானதை அடுத்து தற்பொழுது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருவதோடு கதாநாயகனாகவும் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார்.

ஹீரோவாக வந்து விட்டாலும் தன்னை வளர்த்து விட்ட விஜய் டிவியை மறக்காமல் புகழ் தற்போது குக் வித் கோமாளி 3ம் சீசனுக்கு அவ்வப்போது வந்து செல்கிறார்.

அந்த வகையில் இந்த வார ப்ரோமோ தற்போது வெளிவந்து இருக்கிறது. அதில் புகழ் "நான் பணத்திற்காக வரவில்லை, உங்கள் மனதிற்காக தான் வருகிறேன்" என கூறி இருக்கிறார். இதோ அந்த ப்ரோமோ

Advertisement

Advertisement

Advertisement