• Apr 19 2024

நான் பூமர் கிடையாது உங்க புரிதலே தவறாக இருக்கு- விக்ரமனிடம் பல்பு வாங்கிய அமுதவாணன்- காரசாரமான இரண்டாவது ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்றிருந்தது. நிறைய கடினமான போட்டிகள் இந்த சுற்றில் அரங்கேறி இருந்த நிலையில், அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி இருந்தார்கள்.

மிதிவண்டி டாஸ்க், பிரெட் டாஸ்க், Debate டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாகவும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிந்து கொள்ள கடைசி வரை காத்திருக்க வேண்டிய சூழலும் இருந்தது.இந்த டாஸ்க்கில் அமுதவாணன் வெற்றி பெற்றார்.


இதனை அடுத்து தற்பொழுது BB Critics விருதுகள் வழங்கப்படுகிறது. மற்ற சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் பலரும் பல விதமான விருதுகளை தங்களுக்கு தோன்றும் நபர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் அமுதவாணனுக்கு விக்ரமன் பூமர் அங்கிள் என்ற ஒரு விருதினை வழங்குகின்றார். அதற்கு விக்ரமன் உங்கட புரிதலே தவறாக இருக்கு இந்த விருதை நான் மரியாதைக்காக வாங்கிக் கொள்கின்றேன். ஆனால் ஏற்றுக் கொள்ளமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement