• Apr 19 2024

நான் வாரிசு படம் தான் பார்க்க போறேன்.. துணிவு இயக்குனர் வினோத் அதிரடி பதில்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் குமார்,  தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா,மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 


 இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார். மேலும் இவர் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார்.


அதுமட்டுமல்லாமல் 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார். இந்நிலையில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு படமும், வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகிறது.


மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த இரு திரைப்படங்களின் ப்ரோமோஷன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், துணிவு படத்திற்காக இயக்குனர் எச். வினோத் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் படத்தையும் பற்றியும், அஜித்தை பற்றியும் பல சுவாரஸ்யான விஷயங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் முதலில் துணிவு படத்தை பார்ப்பீர்களா அல்லது வாரிசு படத்தை பார்ப்பீர்களா என்று இயக்குனர் எச். வினோத்திடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்க்கு பதிலளித்த எச். வினோத் ' நான் வாரிசு படத்தை தான் பார்ப்பேன் என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement