• Mar 25 2023

எனக்கு எதிரின்னா அது இளையராஜா மட்டும்தான்; வைரமுத்துவின் மனதில் இருந்ததை போட்டுடைத்த உதவியாளர்

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இசை மேதைகளாக விளங்குபவர்கள் இளையராஜா மற்றும் வைரமுத்து. இவர்கள் இருவரும் இணைந்து நெஞ்சை விட்டு அகலாத பல பாடல்களைக் கொடுத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாது இருவருக்குமான ரிதம் ஒத்துப்போன பிறகு ஏராளமான ஹிட் பாடல்களையும் கொடுத்திருக்கின்றனர்.


இதனைத் தொடர்ந்து இன்னும் பல காலம் இருவரும் இணைந்து ஏகப்பட்ட பாடல்களை கொடுப்பார்கள் என ரசிகர்கள் நினைத்திருந்த சூழலில் இருவருக்குள்ளும் ஏதோ ஒரு காரணத்தால் மோதல் ஏற்பட இருவரும் நிரந்தரமாக பிரிந்துவிட்டனர். 

அவர்கள் பிரிந்து 30 வருடங்களுக்கும் மேல் ஆனாலும் மீண்டும் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமென்பது தமிழ் சினிமா ரசிகர்களின் ஆவலாக இருக்கிறது. அதற்கான முயற்சிகள் ஆரம்பக்கட்டத்தில் கோலிவுட்டில் பல பிரபலங்கள் எடுத்தாலும் அதற்கு பலன் தரவில்லை.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் நடிகரும், வைரமுத்துவிடம் உதவியாளராகவும் இருந்த மாரிமுத்து அவர்கள் இளையராஜா குறித்து வைரமுத்து பேசிய விடயத்தை பகிர்ந்திருக்கின்றார். அதாவது "ஒருகாலத்தில் வைரமுத்துவை இளையராஜா தனது மடியில் வைத்து சோறூட்டினார். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அவரை இளையராஜா தள்ளிவிட்டார்" எனக் கூறியுள்ளார்.


மேலும் "'ஒருமுறை இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்' என்ற தொடரில் இளையராஜா குறித்து எழுத முடிவெடுத்தார் வைரமுத்து. அந்தவகையில் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டு காற்று உன் குத்தகையிலே இருக்கிறது என ராஜா சார் குறித்து எழுதிக்கொண்டிருந்தார். 


அப்போது இளையராஜா இசையமைத்த 'உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி' என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியது. உடனே தான் எழுதிக்கொண்டிருந்த அந்தப் பேப்பரை தூக்கி எறிந்த வைரமுத்து இளையராஜாவை எவனாலும் அழிக்கவே முடியாது. அவன் பெரிய ஆள்யா. எனக்கு எதிரின்னா இளையராஜா மட்டும்தான். அவருடன் வேலை பார்க்கும்போது ஏற்பட்ட திருப்தி அதன் பிறகு யாரிடமும் வரவில்லை என விரக்தியாகவும், சலித்தபடியும் கூறினார்" எனவும் மாரிமுத்து அப்பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement