• Oct 09 2024

அட்ஜஸ்ட்மென்ட் செய்யனும் என்றால் எதற்கு சினிமாவுக்குள் வரணும்- ஓபனாகப் பேசிய சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பித்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.இந்த சீரியல் ஆரம்பித்த சில மாதங்களிலேயே ரசிகர்களின் விருப்பத் தொடராக மாறியுள்ளது. அத்தோடு இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

மேலும் இந்த சீரியலில் ரவியின் நண்பியாக நடித்து வருபவர் தான் ப்ரீத்தா ரெட்டி. இதில் இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மேலும் இது தவிர இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் கூறியதாவது நான் ஆடிசன் சென்று தேர்வான பிறகு கையெழுத்துப் போடும் போது, சில நிபந்தனைகள் வைப்பார்கள். அந்த நிபந்தனைகளால் பட வாய்ப்பே வேண்டாம் என்று சொல்லி வந்துவிடுவோம். எனக்கு அப்படி எல்லாம் நடித்திருக்கிறது. மேலும் சில இயக்குநர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்வார்கள்.

அப்போ இதை தான் செய்ய வேண்டும் என்றால், எதற்கு சினிமாவுக்கு வர வேண்டும்? அதற்கு அதையே தொழிலா செய்துவிட்டு போகலாமே? இது போன்ற பிரச்சனைகளால் சினிமாவைவிட்டு வந்துவிட்டேன்.சின்னத்திரையில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் இல்லை என்று சொல்ல மாட்டேன்.இங்கும் இருக்கிறது ஆனால் இதுவரை நான் சந்தித்தது இல்லை என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement