• Apr 19 2024

பொன்னியின் செல்வன் படத்தை விமர்சிக்க வேண்டுமென்றால் ஆயிரம் சொல்லலாம்..கமல்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து விட்டு கமல் பேசிய பேச்சு சமூக வலைதளத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது.

இயக்குநர் வெற்றிமாறனை தொடர்ந்து ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்து என்கிற மதமே கிடையாதென்று அதிரடியாக பேசியுள்ளார்.அத்தோடு  பொன்னியின் செல்வன் படம் குறித்து அவர் பேசியதும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சியான் விக்ரம் மற்றும் கார்த்தி உடன் அமர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை ஜாஸ் சினிமாஸில் கமல்ஹாசன் பார்த்தார்.இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அவர்களது பல கேள்விகளுக்கு பதிலளித்தார். சியான் விக்ரம் மற்றும் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்துக்கு மக்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி என தெரிவித்தார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் விக்ரம் படத்தின் வசூலை அதிரடியாக முந்தி வருகிறதே, அதை பற்றி உங்கள் கருத்து என்ன என கமலிடம் கேள்வி எழுப்ப, ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. மேலும் இது தமிழ் சினிமாவின் பொற்காலம் என நினைக்கிறேன். வரிசையாக பல வெற்றி படங்கள் இந்த ஆண்டு வெளியாகி வசூல் வேட்டையை நடத்தியுள்ளது.

பொன்னியின் செல்வன் படம் எப்படி இருக்கு என கமலிடம் கேட்க, படத்தை பார்த்து விட்டு விமர்சிக்க வேண்டும் என்றால் ஆயிரம் குறை சொல்லலாம். புத்தகத்திலிருந்த அந்த காட்சி இல்லை, இந்த காட்சி இல்லை என புத்தகம் படித்தவர்களும் கூறுவார்கள். ஆனால், அதையெல்லாம் விட்டு விட்டு மக்களுக்கு படம் பிடித்திருக்கிறதா? இல்லையா? என்பது தான் முக்கியம். போர்க் காட்சிகள் எடுப்பது எவ்வளவு சிரமம் என்பது எனக்குத் தெரியும், இயக்குநர் மணிரத்னம் இந்த படத்தை சிறப்பாகவே எடுத்துள்ளார் என பாராட்டியுள்ளார்.

வந்தியத்தேவன் கதாபாத்திரம் நான் பண்ண வேண்டியது. அத்தோடு அருள்மொழி வர்மன் கதாபாத்திரமும் எனக்கு வந்தது. ஆனால், அப்போது அது முடியாமல் போய்விட்டது. கார்த்தி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்ததை பார்த்து பொறாமைப் பட்டேன் என கமல் பேசிய வீடியோ டிரெண்டாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement