• Sep 21 2023

ரீ ரிலீஸானது 'Biggboss-7' Launch Promo Video... வீடு தான் ரெண்டு என்று பார்த்தால்... தொகுப்பாளரும் ரெண்டா..? வச்சு செய்யும் ரசிகர்கள்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது ஏற்கெனவே 6சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இவ்வாறாக பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. 


இந்த சீசனில் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் எகிறிய வண்ணம் தான் இருக்கின்றது. நாளுக்கு நாள் ஒவ்வொருவருடைய பெயர்களும் இணையத்தில் கசிந்த வண்ணம் தான் இருக்கின்றன. 

மேலும் கமல் நடித்த பிக்பாஸ் ஆடியோ லான்ச் ப்ரோமோ வீடியோ ஏற்கெனவே வெளியாகி வைரலாகியமையை தொடர்ந்து தற்போது விஜய் டிவி மீண்டும் அந்த ப்ரோமோ வீடியோவை ரிலீஸ் செய்துள்ளது.


இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் "( ஆகாஸ்ட் 25 ) ல்  RELEASE பண்ண அதே PROMO RELEASE பண்றிங்க மக்கள்ட போய் சரியா REACH ஆகலயா... என்ன வித்தியாசம் பழைய PROMO-வுக்கும் இதுக்கும்" எனக் கேள்வி கேட்டு வருகின்றனர்.

எது எவ்வாறாயினும் இந்தப் ப்ரோமோவில் கமல், இந்த சீசனில் இரண்டு வீடு என்று கூறியுள்ளமை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மென்மேலும் தூண்டியுள்ளது. அத்தோடு கமலும் இந்தப் ப்ரோமோ வீடியோவில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கின்றார். 

இதனைப் பார்த்த ரசிகர்கள் "இரண்டு வீடு என்று சொல்லிற்று.. இரண்டு தொகுப்பாளரைக் காட்டுறீங்களே" எனக் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement