• Mar 28 2023

இது தெரிஞ்சா திட்டுவாரு, கல்யாணம் அவரோட செலவில் பண்ணி வைக்கமாட்டாரு- தன்னுடைய அப்பா குறித்து கூறிய டாப்ஸி

stella / 1 week ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் டாப்ஸி. இவர் தமிழில் நடித்த ஆடுகளம் திரைப்படம் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்தும் நல்ல கதையுள்ள திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இவர் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடயம் ஒன்று வைரலாகி வருகின்றது.தன் தந்தை மிகவும் கஞ்சத்தனமானவர் என்று குறிப்பிட்ட டாப்ஸி, வாழ்நாள் முழுவதும் பணம் சேமித்த பிறகும், அவர் தனக்காக செலவு செய்வதில்லை என்றார்.


தனக்கும் தன்னுடைய சகோதரி ஷாகுனுக்கும் பிரம்மாண்ட திருமணத்தை நடத்துவது பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் தங்களால் அதைச் செய்ய முடியும் என்றும் டாப்ஸி.ஆனால், தனது அப்பாவுக்காக தான் செலவழிக்கும்போது அவர் இன்னும் கோபப்படுகிறார் என்றார்.

தான் டயட்டீஷியனுக்கு மாதம் 1 லட்சம் செலவு செய்வதாகவும், இது தெரிந்தால் தனது அப்பா திட்டுவார் என்றும் குறிப்பிட்ட டாப்ஸி, தன்னுடைய வேலைக்கு இது எத்தனை முக்கியத்துவம் என்றும் விளக்கினார்.


நான் என்ன படம் செய்கிறேன், என் வாழ்க்கையில் எங்கே இருக்கிறேன் என்பதைப் பொறுத்து எனது உணவுமுறை தொடர்ந்து மாறுகிறது. ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்குப் பிறகு, உடலில் மாற்றங்கள் நிகழும்.


நடிப்புத் தொழிலில், நம்மில் பெரும்பாலோருக்கு ஒரு நிபுணரின் ஆலோசனை தேவைப்படுகிறது. எந்த நகரம் அல்லது எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து, நமக்கு என்ன உணவு சிறந்தது என்பதைச் சொல்ல ஒரு நிபுணர் தேவைப்படுகிறார், என்றும் இதுபற்றி மேலும் கூறினார் டாப்ஸி.


Advertisement

Advertisement

Advertisement