• Sep 27 2024

கார் ஓட்ட போறீங்களா? அப்போ விடாமுயற்சி என்னாச்சி? மீண்டும் கார் ரேஸ் களத்தில் அஜித்...

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொள்வதில் நடிகர் அஜித்திற்கு அதிக விருப்பம் உள்ளது உங்களில் பலருக்கும் தெரிந்தவிடையம் தான். இவர் மீண்டும் கார் ரேஸ் பந்தயத்தில் அவர் கலந்து கொள்ள இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் அஜித் நடிப்பு மட்டுமின்றி, மற்ற துறைகளிலும் விருப்பத்துடன் ஈடுபடுபவர் என்பதும், குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் ஓட்டுவதில் அவர் மிகுந்த விருப்பமுள்ளவர் என்பதும் தெரிந்தது. இந்தியா முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்த அஜித், அடுத்த கட்டமாக உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார் என்பதும், விரைவில் இந்த பயணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.


தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர்  சில சர்வதேச அளவிலான கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டிருந்த நிலையில், தற்போது ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் 2025 கார் பந்தய தொடரில் நடிகர் அஜித் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் கார் ரேஸ்க்கு கம்பேக் கொடுத்துள்ளதால், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement