• Sep 27 2023

இரண்டு வீடு என்றால்,அப்போ சண்டையும் இரண்டாகப்போகுது- Bigg Boss Season 7 இன் மூன்றாவது ப்ரோமோ

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தெலுங்கில், நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பமான நிலையில், போட்டியாளர்கள் பட்டியல் யாரும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. சமூக வலைத்தளத்தை கவர்ச்சியால் கிறங்கடித்த கிரண், ஷகிலா, போன்ற பலர் போட்டியாளர்களாக சென்றுள்ளனர். 

இதை தொடர்ந்து தமிழிலும், உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அடுத்த மாதம், முதல் வாரத்தில் இருந்து ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.


 இதுவரை தேதியை அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், விஜய் டிவி தரப்பில் இருந்து இதுவரை 2 ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனை அடுத்து தற்பொழுது 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல்ஹாசன் இரண்டு வீடு என்றால், எல்லாமே இரண்டா, இரண்டு கிச்சன், இரண்டு சுவிமிங்பூல் அப்போ சண்டையும் இரண்டாகிடும் என்கின்றார்.

அதற்கு மற்ற கமல்ஹாசன் சந்தோசம் இரண்டு மடங்காக இருக்கக் கூடாதா என்று கேட்டுள்ளார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement