• Apr 01 2023

சிம்பு மட்டும் அப்படி செய்யலைனா சந்தானம் என்பவர் காணாமலே போயிருப்பார்- இதுவரை யாரும் அறிந்திடாத விடயம்

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொல்லு சபா என்னும் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் பிரபலமடைந்து வந்த நடிகர் தன் சந்தானம். இதனைத் தொடர்நது படிப்படியாக முன்னேறி தற்பொழுது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாது கதாநாயகனாாகவும் வலம் வருகின்றார்.


இந்த நிலையில் சந்தானம் எப்படி வெள்ளித்திரையில் அறிமுகமாகினார் என்ற விடயம் குறித்து தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதாவது 

லொள்ளு சபா நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த காலக்கட்டத்தில் சிம்பு தமிழ் சினிமாவில் அறிமுக கதாநாயகனாக இருந்தார். 

தொடர்ந்து கதாநாயகனாக நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தார்.2000 ஆண்டுகளில் சிம்புவிற்கு கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. காதல் அழிவதில்லை என்கிற திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடிக்க இருந்தார். அந்த சமயத்தில் சந்தானமும் திரைத்துறையில் வாய்ப்புகளுக்காக முயற்சித்து வந்ததால் சிம்புவிற்கு அவரை தெரிந்திருந்தது.


சந்தானத்திற்கு நல்ல நகைச்சுவை திறன் இருப்பதை கண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு வாங்கி தந்தார். அதை தொடர்ந்து அலை, மன்மதன் என வரிசையாக சிம்பு தனது படங்களில் சந்தானத்திற்கு வாய்ப்பு கொடுத்தார். இப்படியாக ஆரம்பக்கட்டத்தில் சந்தானத்தை சிம்புவே சினிமாவில் வளர்த்துவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement