தன்னுடைய அழகாலும், சிறந்த நடிப்பாலும் பல ரசிகர்களின் மனங்களை கட்டிப் போட்ட ஒருவரே நடிகர் அஜித். இவர் நடிப்பில் ஏராளம் படங்கள் உருவாகி உள்ளன. அந்தவகையில் தற்போது 'துணிவு' திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை முடித்த கையோடு அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகின்ற ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதாவது 'ஏகே 62' எனும் அழைக்கப்பட்டு வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
அதுமட்டுமல்லாது படத்தை மென்மேலும் மெருகூட்டும் வகையில் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முதல் முறையாக இப்படத்தில் நடிக்க ரூ.105 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் அஜித். அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய படங்களில் ஒன்றாகவும் இப்படம் அமைந்திருக்கின்றது.
இப்படம் குறித்த அறிவிப்பு வந்தபோது, ஏகே 62வில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கப் போவதாகவும், அதற்காக ரூ. 10 கோடி நயன்தாரா சம்பளம் வாங்கியுள்ளார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது நயன்தாரா அல்லது திரிஷா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருப்பதாக சினிமா வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. எது எவ்வாறாயினும் இறுதியில் யார் கமிட் ஆகிறார் என்பதனை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!