• Apr 01 2023

நிறுத்தவில்லை என்றால் லியோ படமும் மோசமான தோல்வியைச் சந்திக்கும்- எதிர்ப்பைத் தெரிவித்த பிரபலம்

stella / 1 month ago

Advertisement

Listen News!


லோகேஷ், விஜய் கூட்டணியில் தளபதி 67 படம் உருவாகி வருகின்றது. இப்படத்தின் பெயர் லியோ என வைக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் டைட்டில் ரிலீஸ் ஆனதிலிருந்து படம் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இதில் லோகேஷ் எல்சியு என்று ஹாலிவுட் ரேஞ்சுக்கு இதை பெரிதாக இளைஞர்கள் பேசி வருகிறார்கள்.

 மேலும் ஆளுக்கு ஒரு கதை சொல்லி இதுதான் லியோ படத்தின் கதை என புரளியை கிளப்பி விடுகிறார்கள்.எல்லா படத்தைப் போல சாதாரணமாக இந்த படத்தை விட்டாலே பெரிய அளவில் வெற்றி பெறும். ஏனென்றால் லோகேஷ் முந்தைய படங்கள் எடுத்து பார்க்கும்போது புதுவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் விஜய்க்கு என்றால் கண்டிப்பாக ஏதாவது சம்பவம் செய்திருப்பார்.


லியோ படத்தைப் பற்றி வரும் வதந்திக்கு லோகேஷ் தான் காரணம் என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது. அதாவது வேண்டுமென்றே படத்திற்கு ஹைப் உண்டாக்க வேண்டும் என்று உதவி இயக்குநர்களை வைத்து புரளியை கிளப்பி விடுகிறார் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.இதே போல் தான் ரஜினியின் பாபா படம் வெளியாவதற்கு முன்பே நிறைய அப்டேட் வந்து கொண்டிருந்தது.

 படம் நன்றாக இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதால் தோல்வியை தழுவியது. இதே போல் இப்போது லியோ படத்திற்கு சீப்பாக அப்டேட் கொடுத்து வருகிறார்கள்.


இது லோகேஷாக இருந்தாலும் அல்லது அவரது சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் இதற்கு மேலும் நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் பாபா படத்தைப் போல லியோ படமும் மோசமான தோல்வியை சந்திக்கும் என சினிமா விமர்சகர் பிஸ்மி எச்சரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement