• Apr 19 2024

ஜி பி முத்து இத பண்ணலனா பவர் ஸ்டார் மாதிரி காணாம போயிடுவார் – கருபழனியப்பன் சொன்ன அந்த விசயம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஜி பி முத்துவின் எதிர்காலம் குறித்து இயக்குனர் கருபழனியப்பான் கூறி இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கு நினைவிற்கு வருவது ஜி பி முத்து தான். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி பி முத்து. இவர் 3ஆவது வரைக்கும் தான் படித்து இருக்கிறார். இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இவர் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லா சோசியில் மீடியாவில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார். அதிலும் யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் என்று சொல்லலாம். ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது, இருப்பினும் வேகமாக வளரும் யூடுயூப் சேனல்.

அத்தோடு, யூடுயூபில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. அதோடு ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கண்ணும் ஜிபி முத்து மீது தான் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலக்கி கொண்டு இருந்தார்.மேலும்  இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டது ஜி பி முத்து தான்.


ஆனால், இவர் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.இது பலருக்குமே ஷாக்கை கொடுத்திருக்கிறது. மேலும், இவர் பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 14 நாட்கள் இருந்திருக்கிறார். அத்தோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர்  முன்பிருந்ததை விட அதிகமாக ஜிபி முத்துவிற்கு ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. அத்தோடு, இவர் திரைபடங்களிலும் நடித்து வருகிறார்.

சன்னி லியோனுடன் இணைந்து ‘Oh My Ghosh’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.காமெடி நடிகர் சதீஷ், குக்கு வித் கோமாளி தர்ஷா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. அத்தோடு , இவர் அஜித்தின் துணிவு படத்திலும் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் கருபழனியப்பன், ஜி பி முத்துவின் எதிர்காலம் குறித்து பேசி இருக்கிறார்.


அதில் பேசிய அவர் ‘ஜி பி முத்து என்ன செய்தாலும் அனைவரும் சிரிக்கிறார்கள். அவர் ஏதோ ஒரு வகையில் அனைவரையும் என்டர்டைன் செய்து கொண்டிருக்கிறார். அத்தோடு பிக் பாஸ் கூட அவரது முதல் கிளிப் தான் வைரல். ஆனால், ஜிபி முத்து இப்படியே இருந்து விடுவாரா வைரல் ஆகி விடுவாரா என்றால் அது இல்லை. ஜி பி முத்து அடுத்த திறமையை வளர்த்துக் கொண்டால் அவர் பிரபலத்தில் இருந்து புகழுக்கு சென்று விடுவார். ஆனால், இதை மட்டும் அவர் செய்து வந்தால் டாக்டர் சீனுவாசன் மாதிரி அப்படியே கரைந்து விடுவார்’

Advertisement

Advertisement

Advertisement