• Apr 25 2024

ஆயிஷாவுக்கும் ரச்சிதாவுக்கும் சண்டை வந்தால் வேற வெலில் சம்பவம் இருக்கும்- சீரியல் நடிகர் விஷ்ணு- வைலட் காட் என்ட்ரியா வருவாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் கடந்த மாதம் 9ம் திகதி பிரமாண்டடாக ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து சூடுபிடித்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அத்தோடு வீட்டிலிருந்து இதுவரை 2 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

இதனால் அடுத்து யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகக் காணப்படுகின்றது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சத்யா சீரியல் கதாநாயகனான விஷ்ணு பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.அதில் அவர் கூறியிருக்கும் விடயங்கள் வைரலாகி வருகின்றது.


அதாவது பிக்பாஸ் வீட்டுக்குள்ள போன சில போட்டியாளர்களை எனக்கு நல்லாவெ தெரியும். குறிப்பாக ஆயிஷா ரச்சிதா அமுதவாணன் அசீம் இவங்களை தெரியும் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய விஷ்ணு ஆயிஷா இந்த வீட்டில நடிக்கல அவர் கேஃமை சரியாகத் தான் விளையாடுறாங்க.அவ பேஃக்காக இல்லை. ஆனால் ரச்சிதா அப்படி இல்லை ரொம்ப சேஃவ் கேம் விளையாடுறாங்க அது பார்க்கவே தெரியுது என்று கூறினார்.

மேலும் ஆயிஷாவுக்கு ஜனனியைப் பிடிக்கவில்லை அதனால தான் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஜனனியை வச்சு செய்யிறா. ஆயிஷாவுக்கு பிடிக்காததால் ஜனனியை ரச்சிதா வச்சு கொஞ்சிட்டு இருக்கிறாங்க. இதிலிருந்தே ஆயிஷாவுக்கும் ரச்சிதாவுக்கும் இடையில் ஒரு மிஸ் அன்டர் ஸ்ரான்டிங் இருக்கிறது தெரியுது என்று கூறியுள்ளார்.


அதே போல அன்று ஆயிஷாவுக்கும் அசீமுக்கும் நடந்த பிரச்சினையில கூட ஆயிஷா வார்த்தைகளை விடல இது பாராட்டக்குரியது. அசீம் எல்லாரையும் ரிகர் பண்ணினது சரி ஆனால் அதோட விட்டிருக்கணும். அதை விட்டிட்டு அவர் வாடி போடி என்று கத்தி தன்னோட இமேஜை கெடுத்துகிட்டார். இதனால் தான் வில்லன் மாதிரி அவர் தெரியிறாரு.விக்ரமன் ஹீரோ ஆகிட்டார் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் பசர் அமத்திற கேமில பார்த்தீங்க என்றால் யாருக்கு யாரை பிடிக்கல என்று தெளிவாத் தெரியுது. ரச்சிதா கூட பசர் அமத்திட்டு இருந்தார். அவர் ரொம்ப கோபப்படுவார். அது தான் ஒருஜினல். அவருக்கு எனன என்றால் ரசிகரின் மனதை வின் பண்ணனும் எதுக்கு நெக்கட்டிவ் பேஸ் காட்டணும் என்று இருக்கிறாங்க. அதே போல கதிரவனும் சேஃவ் கேம் தான் விளையாடிட்டு இருக்கிறாங்க அமுதவானம் ரொம்ப ஒரு கடுமையான போட்டியாளர். இன்னும் அவர் சரியா விளையாட ஆரம்பிக்கல என்றும் தெரிவித்திருந்தார்.

அத்தோடு ஆயிஷா அசீம் என்றதை விட ஆயிஷா ரச்சிதாவுக்கு இடையில் மோதல் வந்தால் அது வேற லெவல் ரீட்டாக மக்களுக்கு இருக்கும் என்றும் கோளாறு  எப்பவுமே கோளாறு வேலைய தான் பண்ணிட்டு இருக்கிறார். சீக்கிரம் வெளியே வந்திடுவார் என்று நினைக்கிறேனன் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement