• Apr 20 2024

நான் அப்படி படுக்க மாட்டேன்: நடிகை நயன்தாரா சொன்ன அந்த விசயம்..ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

'கனெக்ட்' பட புரமோஷனுக்காக தொகுப்பாளினி திவயத்ர்ஷினிக்கு நயன்தாரா அளித்துள்ள பேட்டி  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா.இவர்  ரஜினி, விஜய், அஜித் என உச்ச நட்சத்திரங்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார். அண்மையில் தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். அத்தோடு கடந்த 18 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாரா தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றார்.

இவர்  தற்போது 'கனெக்ட்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 'மாயா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஷ்வின் சரவணன். ஹாரர் த்ரில்லர் படமான இப்படத்தில் நயன்தாரா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.அத்தோடு  இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கேம் ஓவர்' என்ற படத்தை இயக்கினார் அஷ்வின் சரவணன். டாப்சி நடிப்பில் வெளியான இந்தப்படமும் விமர்சனம் மற்றும் வசூல்ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.


இவ்வாறுஇருக்கையில்  தற்போது நயன்தாரா நடிப்பில் மற்றொரு ஹாரர் த்ரில்லராக 'கனெக்ட்' என்ற படத்தை இயக்கியுள்ளார் அஷ்வின் சரவணன்.எனினும்  சமீபத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'கோல்டு' படம் எதிர்பார்த்த அளவுக்கு பெயரை பெற்றவில்லை. இதனால் 'கனெக்ட்' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பிரபல தொகுப்பாளின் டிடி என்கிற திவ்யதர்ஷினிக்கு நயன்தாரா அளித்துள்ள பேட்டி இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அப்போது பேய் பயம் குறித்து பேசிய நயன்தாரா, ஆரம்பத்தில் பேய் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை. சின்ன வயசுல யாரோ சொன்னதை கேட்டுட்டு அதன் பின்னர் மல்லாக்க படுக்கவே மாட்டேன், ஒன் சைடாக கை வச்சுத்தான் தூங்குவேன்.


நேரா படுத்தா யாராவது நம் மேல வந்து அப்படியே இறங்கிடுவாங்களாம் என்று கூறினார்கள். தூங்கும்போது எப்பவுமே லைட் ஆஃப் பண்ணாமதான் படுப்பேன்” என்று கூறியுள்ளார். அவர் தெரிவித்துள்ள இந்த பகீர் காரணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அத்தோடு , பெண்களுக்கு திருமணம் என்பது இன்டர்வெல் கிடையாது. அது ஒரு மகிழ்ச்சியான பீலிங் அவ்வளவு தான்.


திருமணத்திற்கு பின்னர் அவர்கள் வாழ்க்கை மாறித்தான் ஆக வேண்டும் என்கிற எந்தவொரு கட்டாயமும் இல்லை என்று தெரிவித்துள்ளார் நயன்தாரா. 'கனெக்ட்' படத்தில் அனுபம் கெர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அத்தோடு நயன்தாராவுக்கு கணவராக நடிகர் வினயும் அப்பாவாக நடிகர் சத்யராஜும் நடித்துள்ளனர். விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து 'கனெக்ட்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement

Advertisement