• Apr 20 2024

''அந்த படங்கள்ல நான் நடிக்கவே மாட்டேன்''...அடம் பிடித்த விஜய்! - ஆனா செம ஹிட் ஆகிடுச்சு!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் இப்போது மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவாக வலம் வந்தாலும் அவரை இந்த அளவுக்கு கொண்டு வந்தது அவர் ஆரம்பத்தில் நடித்த காதல் படங்கள்தான். இதனால் விஜய் இளைஞர்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் எளிதாக கனெக்ட் ஆனார்.

காதல் படங்கள் விஜய்க்கு எப்படி கை கொடுத்தனவோ அதேபோல் குடும்ப சென்ட்டிமெண்ட்டுகளை அடிப்படையாக வைத்து உருவான படங்களும் அவருக்கு நன்றாகவே கை கொடுத்தன. அவர் நடித்த நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா, ப்ரியாமனவளே உள்ளிட்ட படங்கள் அதில் குறிப்பிடத்தகுந்தவை. முக்கியமாக ப்ரியமானவளே படம் விஜய்யை பல குடும்பங்களிடம் கொண்டு போய் சேர்த்தது. ஆனால் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என விஜய் அடம் பிடித்த சம்பவம் தற்போது தெரியவந்திருக்கிறது.

ப்ரியமானவளே படத்தை பொறுத்தவரை அது பெண்ணை சுற்றி கட்டமைக்கப்பட்ட கதை. ஹீரோயின் கதாபாத்திரத்தில் சிம்ரன் சிறப்பாக நடித்திருப்பார். விஜய்யும் அருமையாக நடித்திருப்பார். படம் முழுவதும் சிம்ரனே ரூல் செய்திருப்பார். எனவே அந்தப் படத்தின் கதையை கேட்ட விஜய் நடிக்க மறுத்துவிட்டாராம் விஜய்.

, 'இதுல என்னப்பா இருக்கு. ஹீரோயின்தானேப்பா ஜெயிக்கிறாங்க. அவங்கதானே ஹீரோவ வாங்கு வாங்குனு வாங்குறாங்க' என கூறியிருக்கிறார். ஆனால் விடாப்பிடியாக நின்ற எஸ்.ஏ.சந்திரசேகர், இந்தப் படம் நிச்சயம் ஹிட்டாகும். உனது சம்பளம் தான் ஏறும் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகுதான் ப்ரியமானவளே படத்தில் நடிக்க விஜய் ஒத்துக்கொண்டாராம்.

அதேபோல் ப்ரியமானவளே படத்துக்கு முன்னதாக வெளியாகி மெகா ஹிட்டான நினைத்தேன் வந்தாய் படத்தில் நடிப்பதற்கும் விஜய்க்கு விருப்பம் இல்லையாம். இந்தப் படமும் 1996ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மெகா ஹிட்டான பெல்லி சந்தடி படத்தின் ரீமேக்காகும். இந்தப் படத்தின் உரிமையையும் எஸ்.ஏ.சி வாங்கி வைத்து விஜய்யிடம் நடிக்க சொல்ல, அதற்கும் விஜய், 'இதுல என்னப்பா இருக்கு. ரொம்ப பழசா இருக்கு' என்றிருக்கிறார்.


விஜய்க்கு இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தவை. ஆனால் இந்த இரண்டு படங்களிலும் விஜய்யை நடிக்க வைக்க எஸ்.ஏ.சந்திரசேகர் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் செல்வபாரதி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement