• May 29 2023

என்னைப் பற்றி யாரும் சொல்லிடுவாங்க மகனை வெளியில் விடவே மாட்டேன்- மகன் குறித்து கவலைப்பட்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒரு கிளாமர் குயினாக வலம் வருபவர் ரேஷ்மா. ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்த இவர் பிக் பாஸ் மூலம் மிகவும் பிரபலமானார். நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரியான இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்திலும் விலங்கு என்ற வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார்.

மேலும் விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலிலும் லீடு ரோலில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.அதுமட்டுமல்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்து மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார். 


இந்த நிலையில் அவர் தன்னுடைய மகனைப் பற்றிய ஒரு செய்தியை கூறியுள்ளார்.அவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இதற்கு முன்பு தன்னுடைய மகனுடன் ரேஷ்மா அமெரிக்காவில் தங்கி இருந்தார். பிக் பாஸில் கலந்து கொள்வதற்காகத்தான் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து இறங்கினார்.

அதிலிருந்தே சென்னையிலேயே குடியேறி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அது மட்டுமில்லாமல் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு தமிழ் தெரியாது எனவும் தெலுங்கு தெரியாது எனவும் கூறிய ரேஷ்மா அவன் அமெரிக்காவில் படித்ததினால் சென்னையில் கூட ஒரு அமெரிக்கன் பள்ளியில் தான் ஆன்லைன் வகுப்பில் பாடம் கற்றுக்கொண்டு வருகிறான் என்று கூறியிருக்கிறார்.


மேலும் அவனுக்கு நண்பர்கள் வட்டாரமும் சிறிதளவு தான் என்றும் கூறியிருக்கிறார். மேலும் வெளி உலகமே தெரியாமல் அவனை தான் வளர்த்து வருவதாகவும் என்னைப் பற்றி ஏதாவது அவனிடம் சொன்னால் அவன் மனம் வருந்த கூடும் எனவும் அவனை வெளியில் விடாமல் மிகவும் பாதுகாப்பாக காத்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement