• Mar 25 2023

“பிரேம்ஜியை தான் திருமணம் செய்வேன்” சில்க் ஸ்மிதாவின் சேட்டைகளை கூறிய கங்கை அமரன்!

Jo / 3 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா தனது கவர்ச்சி நடனத்தால் பல ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தார் என்று கூறலாம். இவர் மண்ணை விட்டு மறைந்தாலும் கூட அவர் நடித்த படங்கள், அவர் நடனம் ஆடிய பாடல்கள் காலத்தால் அழிக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.

இந்த நிலையில், சில்க் ஸ்மிதா பற்றி பல பிரபலங்கள் பேட்டிகளில் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த வகையில், இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில்க் ஸ்மிதா பற்றி பேசியுள்ளார்.  இது குறித்து பேசிய கங்கை அமரன் ” சில்க் ஸ்மிதா எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்.

எங்களுடைய வீட்டிற்கு அடிக்கடி வருவார். என்னுடைய மனைவியுடன் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. அடிக்கடி எங்களுடைய வீட்டிற்கு வந்து சாப்பிடுவது செல்வதுமாக இருப்பார். அவருடைய இறப்பு எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சில்க் ஸ்மிதா என்னை மச்சான் என்றுதான் அழைப்பார்.

‘இன்னொரு விஷியத்தை நான் சொன்னால் எல்லோரும் பொறாமைப்படுவார்கள், என்னை பார்த்ததும் சில்க் ஓடி வந்து கட்டிபிடித்துக்கொள்வார். பிரேம்ஜி அப்போது சிறிய பையன், அவனைப்பார்த்து நான் பிரேம்ஜியைத்தான் திருமணம் செய்வேன் என்று விளையாட்டாக கூறுவார். பிரேம்ஜி வெட்கத்தில் ஓடிவிடுவான்’ என கங்கை அமரன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement