• Apr 25 2024

நான் கண்டிப்பா திரும்ப வந்து உங்களை என்டர்டெயின் பண்ணுவேன்- குக்வித்கோமாளிலியிருந்து வெளியேறிய ஐயப்பன் வெளியிட்ட வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

குக்வித் கோமாளி சீசன் 4 ஆனது அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதில் மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்து வந்த ஷிவாங்கி குக்காக பங்கேற்று கலக்கி வருகின்றார்.

ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரை சூப்பராக சமைத்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியிலிருந்து ராஜ் ஐயப்பன் வெளியேறியிருந்தார். இது இவருடைய ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றமாவே இருந்தது.


இந்த நிலையில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஐயப்பன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் குக்வித் கோமாளி ஷோவினுடைய ஹீரோக்கள் வில்லன் எல்லாம் கோமாளிகள் தான் ஒரு குக் நல்லா சமைத்தால் அதற்கு கோமாளிகள் தான் காரணம் நல்லா சமைக்கல என்றால் அவங்க காரணமாக இருக்க மாட்டாங்க.


நான் பெருசா யார் கிட்டையும் பேச மாட்டேன். ஆனால் இந்த ஷோவுக்கு வந்ததற்கு பிறகு நிறைய பேர் கிட்ட பேச ஆரம்பிச்சேன்.வேற யார் கூட இருந்தாலும் குரேஷி அண்ணா என்கிட்ட வந்து பேசுவாரு. ரக்ஷன் அண்ணா உங்களுக்கு பெரிய நன்றி நான் பேசாத டைம்ல பேசி என்னை என்கிரேஜ் பண்ணினீங்க. சின்ன டைம்ல எங்களை இவ்வளவு பெரிய வரவேற்புக் கிடைச்சிச்சு.கண்டிப்பா வைல்ட்காட்ல வந்து திரும்ப உங்களை சந்தோஷப்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement