• Sep 27 2022

'நானே வருவேன்' என்னுடைய கதை அல்ல..திடீரென ஷாக் தகவலை வெளியிட்ட செல்வராகவன்!

Listen News!
Aishu / 3 days ago
image
Listen News!

தனுஷ் நடிப்பில் இந்த மாதத்தின் இறுதியில் வெளியாகவுள்ள 'நானே வருவேன்' படத்தின் கதை தன்னுடையது இல்லை என செல்வராகவன் கூறிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

 நடிகர் தனுஷ் நடிப்பில், சமீபத்தில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம், ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவோடு, சுமார் 100 கோடி கிளப்பில் இணைந்தது. அத்தோடு நீண்ட இடைவெளிக்கு பிறகு  தனுஷ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை படக்குழுவினரும் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். 

மேலும்  இந்த படத்தை தொடர்ந்து, தனுஷ் தன்னுடைய சகோதரர், செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அத்தோடு  இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தாணு தயாரித்துள்ளார்.



சமீபத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் அக்ஷன் காட்சியில் மிரட்டிய டீசர் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்திற்கு U /A  சான்றிதழ் கிடைத்த தகவலை நேற்று படக்குழு அறிவித்திருந்தது.

ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில் இந்துஜா, ஜெர்மன் நாட்டு நடிகை எல்லிஅவ்ர்ராம் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.மேலும்  இவர்களை தவிர முக்கிய கதாபாத்திரத்தில், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  



TAGS
Thank you for voting! 0 votes
0%
0%
0%
0%
0%
0%