இன்னும் எத்தனை படத்தில் சாந்தனு அழைத்தாலும் நடித்துக் கொடுப்பேன் – எனக்கு சான்ஸ் தந்தவரை மறக்க முடியுமா?

3708

கே பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யோகி பாபு ’12 வருடத்துக்கு முன்னர் நான் சான்ஸ் தேடி அலைந்தபோது பாக்யராஜ் சார் ஆபிஸுக்கு தினமும் செல்வேன்.

அப்போது அவர் சித்து +2 படத்தில் எனக்கு சிறிய வேடம் கொடுத்தார். அப்படி இருக்கும்போது இன்று நான் பிஸியாக இருக்கிறேன் என்பதற்கான அவர் மகன் படத்தில் நடிக்காமல் இருக்க முடியுமா? அதனால் தேதிகள் பற்றிக் கவலைப்படாமல் இந்த படத்தில் வந்து நடித்தேன்.

இன்னும் எத்தனை படத்தில் சாந்தனு அழைத்தாலும் நடித்துக் கொடுப்பேன்’ எனக் கூறியுள்ளார். இவ்வாறு கூறியதனுடாக யோகி பாபுவின் விசுவாசத்தை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

இப் படத்தில் சாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார் என்பதும் ஒரு முக்கிய வேடத்தில் கே பாக்யராஜ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யோகிபாபு மதுமிதா ரேஷ்மா மனோபாலா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.