• Mar 28 2023

“விஜய்க்கு நான் தான் டான்ஸ் சொல்லி கொடுத்தன், இப்ப இத சொன்னா செருப்பால தான் அடி வாங்குவன்”- நண்பர் சஞ்சீவ்வின் சுவாரஸ்ய பேட்டி!

Jo / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் வெங்கட் சினிமாவில் ஹீரோவுக்கு நண்பராக சில படங்களில் நடித்திருப்பார். ஆனாலும் அவர் பிரபலமானது சின்னத்திரை சீரியல்களில் தான்.

ஆரம்பத்தில் சஞ்சீவ் என்று சொன்னால் அதிகமாக யாருக்கும் தெரியாது. விஜய்யின் ஃபிரண்ட் அல்லது திருமதி செல்வம் சஞ்சீவ் என்றால் தான் நிறைய பேருக்கு தெரியும்.சீரியல் நடிகை ப்ரீத்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர் சேனல் ஒன்றிற்கு விஜய் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதாவது; ''காலேஜ்ல நான் தான் அவனுக்கு டான்ஸ் சொல்லிக்குடுப்பன், நான் கொரியராப் பண்ணும் போது சுமார் தான்,அப்போ நான் தான் நல்லா ஆடுவன். ரஜினி சாரிண்ட ''ராக்கு முத்து ''.. சாங்குக்கு ஸ்ரேச்ல ஆடி இருக்கம். அப்போ நான் தான் அவனுக்கு கொரியராப்பர் ..அப்படி இப்போ சொல்லிக்க முடியுமா யாரும் கேட்டா  செருப்பால தான் அடி வாங்குவன். இப்போ அவன் ஆர்ற டான்ஸ் எல்லாம் நம்மளால ஆட முடியாது. அவன்ர மூமெண்ட சும்மா ட்ரை பண்ணி பார்ப்பன். 50 பேர் ஆடினாலும் விஜய்யை மட்டும் தான் பார்க்க தோணும். விஜய்ன்ர டான்ஸ் எல்லாம் வேற லெவல்ல இருக்கும்'' .என்று கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement