• Dec 05 2022

நான் நிஜமாகவே கர்ப்பமாக இருந்தேன்..சீக்கிரட்டை உடைத்த கயல் ஆனந்தி

Listen News!
Aishu / 3 weeks ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட ஒருவரே நடிகை ஆனந்தி.

இவர் இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டில் வெளியான 'கயல்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர். இந்தப் படமானது அமோக வெற்றியை பெற்றிருந்தமையால் அன்றிலிருந்து அனைவராலும் 'கயல் ஆனந்தி' என்றே அழைக்கப்பட்டார். 

எனினும் தற்போது அவர் யுகி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதன் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது தான் கர்ப்பமாக இருந்தது பற்றி அவர் பேசி இருக்கிறார்.

மேடையில் பேசிய ஆனந்தி, 'இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல், ஏனென்றால் இதில் நடிக்கும்போது நான் நிஜத்திலேயே கர்பமாக இருந்தேன்' என சொல்லி இருக்கிறார். அதனால் தற்போது அவர் குழந்தைக்கு அம்மா ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்தி அலாவுதீனின் அற்புத கேமரா என்கிற படத்தில் நடித்தபோது, அதில் துணை இயக்குனராக பணியாற்றிய சாக்ரடீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் நவீனின் உறவினர் தான் சாக்ரடீஸ் என்பது கூடுதல் தகவல். அத்தோடு ஆனந்தி கர்ப்பமாக இருக்கிறார், வளைகாப்பு நடைபெற போகிறது என கடந்த வருடமே செய்தி வந்தது, ஆனால் அதை உறுதி செய்ய புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது அவரை மேடையில் தனக்கு குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை உறுதி செய்திருப்பது பலருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறது.