• Mar 29 2024

“ வருஷத்துக்கு ஒரு படமாவது நடிக்கனும்” - இயக்குநர் லோகேஷுடன் நடிக்க ஆசைப்படும் நெப்போலியன்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவின் மிகவும் உயர்ந்த மனிதர்.சத்யராஜ் முன்பே உயரத்திற்காக பேசப்பட்ட நெப்போலியன், இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.ஏகப்பட்ட படங்கள் நடித்து பிரபலமான நெப்போலியன் அரசியலிலும் ஈடுபட்டு அமைச்சராக இருந்தவர்.

ஏழை குழந்தைகள் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனை ஒன்றை கட்டி, அதனை 12 வருடத்திற்கும் மேலாக நடத்தி வருகிறார் நடிகர் நெப்போலியன்.இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் அங்கு சிகிச்சைக்காக வருகிறார்களாம்.ற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். 

இவர்  நீண்ட காலமாக  சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார்.இது குறித்து சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார் .

கேள்வி;-ஏன் நீங்க சினிமாவில் நடிப்பது குறைஞ்சிட்டு? கண்டிப்பா நீங்க இனி சினிமாவில் நடிக்கனும்னு எல்லாரும் ஆசைப்படுறம்.

பதில்'-பிள்ளைகள் என்று இருந்ததால மற்ற விஷயங்கள் ஒன்றும் பண்ணோணும்னு தோணல ,அதாவது திருப்பவும் சினிமாவில் நடிக்கனும் என்ற ஆசையெல்லாம் குறைஞ்சசிடுச்சு.கண்டிப்பா வருவன்.குறைந்தது வருசத்துக்கு ஒரு படமாவது நடிக்கனும் என்று இருக்கன்.வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பா வந்து நடிப்பன் .

நீங்க பல இயக்குநர்களுடன் ஒர்க் பண்ணி இருப்பீங்க இப்ப இருக்கிற ஜெனரேஷன்ல உங்களுக்கு புடிச்ச இயக்குநர்  யாரு நீங்க யாரு கூட ஒர்க் பண்ண நினைக்கிறீங்க?

பதில்;-இப்போ இருக்கிற ஜெனரேஷன் கூட பழகினது இல்லை ,இருந்தாலும் கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ் இப்போ ரீசண்டா நல்லா பண்றாங்க .அதனால அவங்க படத்துல நடிக்கணும்னு ஆசை அது முடியுமா என்று நமக்கு தெரியாது. பொன்னியின் செல்வன் படத்துல அந்த ஹாரக்டர்,இந்த ஹாரக்டர்பண்ணியிருக்கலாமே ,ஏன்  நடிக்கலை என்று பல பேர் கேட்டாங்க , 100, 150 நாட்கள கொடுத்திட்டு மகன விட்டுட்டு ,அங்க இருந்து என்னால படம் நடிக்க முடியாது.

பொன்னியின் செல்வன் அமெரிக்காவில் பக்கத்துல இங்கே எடுத்திருந்தா வசதியா இருந்திருக்கும் .வாய்ப்பு கொடுக்கும்போது கண்டிப்பா படம் பண்ணுவன். நாங்க வாழ்கின்ற வாழ்க்கை ரொம்ப குறைவு அதுக்குள்ள நாம எதையாவது  சாதிச்சிட்டு போகணும்.என்று கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement