• Mar 28 2023

சிவாஜிக்கு ஜோசியம் பார்த்து சொன்னேன் அது மாதிரியே நடந்திச்சு- நீண்ட நாள் ரகசியத்தை கூறிய பிரபல நடிகர்

stella / 3 weeks ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பினால் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி வைத்திருந்த நடிகர் தான் சிவாஜி கணேசன்.எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள் இவரின் நடிப்பின் மூலமாகவே பல சரித்திர நாயகர்களை நாம் கண்டு கழித்திருக்கிறோம். நடிப்பின் மீது இவர் காட்டிய ஆர்வம் இறக்கும் தருவாய் வரைக்கும் உணர முடிந்தது.


இந்த நிலையில் சிவாஜியுடன் தனக்கு இருந்த நெருக்கத்தை பிரபல நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி ஒரு பேட்டியின் போது தெரிவித்திருந்தார். வெண்ணிறாடை மூர்த்திக்கு இயல்பாகவே ஜோசியம் பார்க்கும் திறன் வாய்க்கப் பெற்றவர்.


இதனை அறிந்த சிவாஜி வெண்ணிறாடை மூர்த்தியிடம் ‘ நீ ஏதோ ஜோசியம் பார்ப்பீயாமே? எனக்கு கொஞ்சம் பார்த்துச் சொல்’ என்று கூறியிருக்கிறார். உடனே மூர்த்தி ‘ஜாதகம் இருந்தால் தானே பார்க்க முடியும்?’ என்று கூற உடனே மறு நாள் எடுத்து வரச்சொல்லி பார்க்க சொல்லியிருக்கிறார். ஜாதகத்தை பார்த்த மூர்த்தி சிவாஜியிடம் ‘உங்களுக்கு அரசு சம்பந்தமான வேலைகளில் நுழைய வாய்ப்பிருக்கிறது’என்று கூறியிருக்கிறார்.அதற்கு சிவாஜி ‘என்னது நானா அரசு வேலையில் ?’என்று சொல்ல ‘ஆமாம், உங்க ஜாதகம் அப்படி தான் சொல்லுது, ஆனால் ஒரு விதத்தில் அரசு சம்பந்தமான வேலையில் இருப்பீர்கள்’ என்று ஒரு ஆண்டு பிப்ரவரியில் சொல்லியிருக்கிறார். அதே பிப்ரவரியில் ராஜ்யசபாவில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சிவாஜி.


இதனால் அவரை பார்க்க நிறைய பேர் அவர் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். ஒரு படப்பிடிப்பில் சிவாஜியும் வெண்ணிறாடை மூர்த்தியும் சந்தித்த போது மூர்த்தியிடம் சிவாஜி ‘ஏன் என்ன வந்து பார்க்கல? எல்லாரும் வந்து பார்த்தார்கள்’என்று சொல்ல அதற்கு மூர்த்தி ‘சொல்லப் போனால் நீங்க தான் என்ன வந்து பார்த்திருக்கனும், ஜோசியம் சொன்னவன் நான்’ என்று சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தாராம் சிவாஜி.இந்த விடயத்தை இவர் பேட்டியில் கூறியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement