• Apr 16 2024

அசல் என்று நினைச்சிட்டு வந்தேன் கதிரவன் ஒரு வெள்ளைச் சட்னி- ஜனனி சொன்னதை கேட்டு சிரிச்ச ஹவுஸ்மேட்ஸ்!!

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்ததில் இருந்து விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.இந்த வாரம் நீதிமன்றம் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதனை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சிறப்பாக செய்து முடித்தனர்.மேலும் நேற்றைய தினம் வேஸ்ட் போட்டியாளராக குயின்சி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் தேர்வாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இவர்களைச்  சுற்றி வெளியே அமுதவாணன், கதிரவன், அசீம், மணிகண்டா, மைனா நந்தினி உள்ளிட்டோர் அமர்ந்திருக்கின்றனர். அப்போது கதிரவன் Hoodie ஆடை போட்டுக் கொண்டு தலையை மறைத்து வைத்துள்ளார்.

அந்த சமயத்தில் அங்கே வரும் ஜனனி, "கதிரவனைப் பார்க்க அசல் மாதிரி இருக்கு. நான் அசல் Mindsetல தான் வந்தேன் அசல் மாதிரி இருக்கேன்னு. இப்படி தான் அவனும் நல்லா மூடி கட்டிக்கிட்டு, நிவாசினி கிட்ட போய் இருப்பான்" என சிரித்து கொண்டு ஜனனி சொல்ல, தொடர்ந்து அமுதவாணனும் அதை நினைவு படுத்தி சில கருத்துக்களை தெரிவிக்க அங்கிருந்த அசீம், கதிரவன், மணிகண்டா உள்ளிட்ட போட்டியாளர்கள் சிரிக்கவும் தொடங்குகின்றனர்.


இதே போல இரவு நேரத்தில் படுக்கை அறையில் அசீம், விக்ரமன், ராம், அமுதவாணன், தனலட்சுமி உள்ளிட்டோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கதிரவனை குறிப்பிட்டு பேசும் ஜனனி, "கதிரவன் ஒரு சப்ப பையன், சட்னி டி அவன் வெள்ளையா இருக்கறதுனால சட்னி டி, அவன் வெள்ளை சட்னி டி" என அடுத்தடுத்து பேச அங்கிருந்த போட்டியார்களும் சிரிக்கத் தொடங்கி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement