• Apr 19 2024

அஜித்திடம் இந்த விஷயம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்- ஓபனாகவே சொன்ன விஜய் - ஆமால்ல இது அவர்கிட்ட நிறையவே இருக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.இப்படப்பிடிப்பில் அண்மையில் பாலிவூட் நடிகர் சஞ்சய் தத் கலந்து கொண்டார்.

இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என்பன அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.


லியோ படத்திற்கு பின் அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது. அது உண்மையா இல்லை வெறும் வதந்திதானா என்பது லியோ திரைப்படம் வெளியாகிய பின்னரே தெரிய வரும்.


நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன் வில்லு படத்தின் நடித்திருந்த போது  கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய சமகால நடிகர்கள் பற்றியும், அவர்களிடம் தனக்கு என பிடிக்கும் என்பதை பற்றியும் விஜய் பேசியுள்ளார்.இதில் விக்ரம், சூர்யா, சிம்பு என வரிசையாக கூறி வந்த விஜய், நடிகர் அஜித்திடம் தனக்கு பிடித்தது அவருடைய தன்னம்பிக்கை தான் என்று கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement