• Apr 18 2024

அடடே அவர் என்று தவறுதலாக நினைத்து விட்டேன் இருந்தாலும் நன்றி- பல்பு வாங்கிய கமல்ஹாசன்- கலாய்த்து வரும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விக்ரம் படத்திற்குப் பிறகு கமல்ஹாசனின் மார்க்கெட் இன்னும் அதிகரித்துள்ளது எனலாம். அந்த வகையில் இவர் தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அத்தோடு இது தவிர கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியினையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.


இந்நிலையில் டிவிட்டர் பக்கத்தில மவுலி என்பவர், நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் திருநங்கை ஷிவினை கேலி செய்த அசீமையும் மணிகண்டனையும் கடுமையாக விளாசியதற்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.இதனை பார்த்த கமல்ஹாசன், அவமானப்படுத்தாமல் ஆபாசம் இல்லாமல் நகைச்சுவை செய்த தலைவர்களில் நீங்களும் ஒருவர் என்று குறிப்பிட்டு தன்னை பாராட்டியதற்கு நன்றியும் கூறினார்

 இதனை பார்த்த அந்த நபர் என்னுடைய மெஸேஜ் உங்களை சேர்ந்தது மகிழ்ச்சி என்று கூறியிருந்தார்.மவுலியின் இந்த மெஸேஜ்ஜை பார்த்து சுதாரித்த கமல், இயக்குரும் மூத்த நடிகருமான திரு மௌலி என தவறுதலாக நினைத்துவிட்டேன், இருந்தாலும் தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். கமலின் இந்த டுவிட் மெஸேஜ்களை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஆண்டவரே இதெல்லம் என கேட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement