• Sep 30 2023

'ஐ மிஸ் யூ டார்லிங்' ...பேத்தி வயது கீர்த்தி சுரேஷுக்கு சிரஞ்சீவி சொன்ன வார்த்தை...!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் சிரஞ்சீவியின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் இன்னும் சில தினங்களில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி இந்தப்படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. நடிகர் அஜித் - சிவா கூட்டணியில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக்காக போலா சங்கர் படம் ரிலீசாகவுள்ளது. 

இதனிடையே தெலுங்கில் உருவாகியுள்ள போலா சங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக தமன்னாவும் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். படத்தை மெஹர் ரமேஷ் இயக்கியுள்ளார். படம் வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள போதிலும், தெலுங்கு ரசிகர்களை கவரும் வகையில் படத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மெஹர் ரமேஷ் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். படம் ரஜினியின் ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு மறுநாள் ரிலீசாகவுள்ளது.

முன்னதாக படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், நேற்றைய தினம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிரஞ்சீவி நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து பாராட்டித் தள்ளினார். படப்பிடிப்பு தளத்தில் அவர் உற்சாகமாக இருந்ததை சுட்டிக் காட்டினார். சூட்டிங்கின் முதல் நாளிலேயே தான் அண்ணா கிடையாது என்பதை கீர்த்திக்கு தெளிவுப்படுத்தியதாக சிரஞ்சீவி தெரிவித்துள்ளர். மேலும் படத்தின் நாயகியாகவே தான் கீர்த்தியை பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்தப்படத்திலும் வாய்ப்பிருந்தால் அவர் ஹீரோயினாக நடிப்பார் என்றும் கூறியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் மிகவும் சிறப்பான பெண் என்றும் அவர் பாராட்டியுள்ளார். படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், கீர்த்தி சுரேஷை தான் கண்டிப்பாக மிஸ் செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஐ மிஸ் யூ டார்லிங் என்று அவர் கூறினார். முன்னதாக இந்த பேச்சின்போது, கீர்த்தியின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனிடையே சிரஞ்சீவியின் இந்தப் பேச்சை மிகுந்த உற்சாகத்துடன் கீர்த்தி சுரேஷ், பக்கத்தில் இருந்தபடிரசித்து சிரித்துக் கொண்டிருந்தார்.


தன்னுடைய பேத்தி வயதுள்ள ஒரு பெண் குறித்து சிரஞ்சீவி பொதுமக்கள் முன்னிலையில் இப்படி பேசியது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த கீர்த்தி சுரேஷ், சிரஞ்சிவிக்கு வணக்கம் தெரிவித்தார். சிரஞ்சீவியும் அவருக்கு வணக்கம் தெரிவித்த நிலையில், உடனடியாக சிரஞ்சீவியை கட்டியணைத்து தன்னுடைய உற்சாகத்தை தெரிவித்தார். மேலும் இந்தப் படத்தின் வாய்ப்பை தனக்கு அளித்த சிரஞ்சீவிக்கு அவர் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement