• Apr 24 2024

அந்த பெண்ணை தான் காதலிக்கிறேன்-கமலின் முன்பே உண்மையை உடைத்த முக்கிய போட்டியாளர்..வெளியான வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.பிக் பாஸ் வீட்டில் நேற்று கமல்ஹாசன் அஸீம் மற்றும் ஷெரினா ஆகியோரை விளாசி தள்ளிவிட்டார். தனலட்சுமி மீது அவர்கள் சொன்ன பொய் புகாரை குறும்படம் போட்டு காலி செய்து விட்டார் கமல்.

அதன் பின்னர்  கமல் ஒரு டாஸ்க் கொடுத்தார். போட்டியாளர்கள் உருவத்துடன் பொம்மை வீட்டுக்குள் அனுப்பப்பட்டது. எதாவது ஒரு போட்டியாளர் பொம்மையை எடுத்து அவர்களிடம் நீங்கள் கூற  விரும்பும் விஷயத்தை சொல்லுங்க என கமல் கூறினார்.

அப்போது ராபர்ட் மாஸ்டர் வேகமாக ஆயிஷா பொம்மையை எடுத்து கையில் வைத்து கொண்டு 'எனக்கும் எனது காதலிக்கும் இருக்கும் வயது வித்தியாசத்தை பற்றி பேசாதீங்க. அத்தோடு காதலில் வயது பார்க்காதீங்க' என  சொன்னார்.



கமல் சென்றபின் மற்ற போட்டியாளர்களிடம் பேசிய ராபர்ட் "எனது காதலிக்கு 22 வயது தான் ஆகின்றது. எனக்கு 41 ஆகிறது. பெரியப்பா வயதில் இருக்கும் ஒருவருடன் லவ் என ஆயிஷா எனது காதலை பற்றி தவறாக எல்லோரிடமும் பேசுகிறார். அதனால் தான் எனக்கு கோபம் வந்துவிட்டது" என ராபர்ட் மாஸ்டர் சொல்லி இருந்தார்.



நான் சிங்கிள் என இதற்கு முன் அவர் சொன்னதெல்லாம் பொய் என்பது தற்போது தான் இதன் மூலமாக தெரிய வந்திருக்கிறது. 



Advertisement

Advertisement

Advertisement