• Apr 18 2024

அவருக்கு நான் பெரிய ஹக் கொடுக்க வேண்டும்- சூப்பர் போட்டோவைப் பகிர்ந்த ரவீந்தர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் லிப்ரா புரடெக்ஷன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் தான் தயாரிப்பாளர் ரவீந்தர். இவர் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம்  நளனும் நந்தினியும், நட்புன்னா என்னன்னு தெரியுமா? , முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

இது தவிர தற்பொழுது  விடியும் வரை காத்திரு என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் நடித்தபோதுதான் நடிகை மகாலட்சுமிக்கும் ரவீந்தருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.


திருமணத்திற்கு பிறகு ரவீந்தரும் மகாலட்சுமியும் சமூக வலைதளங்களில் தங்களின் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரவீந்தர் ஷேர் செய்துள்ள போட்டோ ஒன்றை பார்த்த நெட்டிசன்கள் சூப்பர், க்யூட் என கமெண்ட் பாக்ஸை நிரப்பி வருகின்றனர்.


 அதாவது மகாலட்சுமியையும் ரவீந்தரையும் ஓவியமாக வரைந்துள்ளார் ஓவியர் பச்சை முத்து.அந்த ஓவியத்தில் இருவரும் தத்ரூபமாக உள்ளனர். இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள ரவீந்தர், ஓவியர் பச்சை முத்துவுக்கு ஒரு பெரிய ஹக் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் தமது லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.


Advertisement

Advertisement

Advertisement