Monday, August 8, 2022

என்னிடம் பணம் குறைவாகவே உள்ளது என் உடலை ஏன் காட்டக்கூடாது?- மீண்டும் நிர்வாணமான போட்டோ ஷுட் நடத்திய நடிகர்

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகராக இயக்கும் ரன்வீர் சிங், வித்தியாசமான ஆடைகள் அணிவது, ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்வது என அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், ரன்வீர் பத்திரிக்கை ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார்.

ரன்வீரின் இந்த நிர்வாண போட்டோஷூட்டிற்கு சமூக வலைதளங்களில் ஏராளமான எதிர்ப்புகள் கிளப்பின.அத்தோடு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ரன்வீர் சிங் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு, பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகக் கூறி மும்பை செம்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது.

இவரைத் தொடர்ந்து தமிழ் நடிகரான விஷ்ணு விஷால் தனது அடுத்த படமான மோகன்தாஸ் படத்திற்கு ப்ரமோஷன் செய்யும் நோக்கில், தனது பெட்ரூமில் இருந்தபடி நிர்வாண போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். ரன்வீர் சிங் போல விஷ்ணு விஷாலும் படுக்கை அறையில் படுத்துக்கொண்டு போட்டோ எடுத்தது சர்ச்சைக்குள்ளானது.

அந்த புகைப்படத்தின் சர்ச்சை அடக்குவதற்குள்ளே பாலிவுட் நடிகர் குணால் வர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக என்னிடம் செலவு செய்வதற்கு பணம் குறைவாகவே உள்ளது. அதனால் அதை என் உடலுக்குச் செலவழிக்கத் தேர்ந்தெடுத்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, பேட்டி அளித்துள்ள பாலிவுட் நடிகர் குணால் வர்மா, ரன்வீர் சிங் அனைத்து தடைகளையும் தாண்டி புகைப்படத்தை வெளியிட்டு, முன் முயற்சி எடுத்துள்ளார். மேலும், நான் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறேன், என் உடலை ஏன் காட்டக்கூடாது? என்று கேட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படத்தை என் மனைவி எடுத்ததாக அழகாச சிரித்துக் கொண்டே கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்