• Jun 04 2023

"Pregnancy வாட்ல மயக்கம் போட்டு விழுந்துட்டேன்- மனைவியின் பிரசவ வலி பற்றி ஓபனாக பேசிய ஜெயம் ரவி- இதெல்லாம் பண்ணியிருக்காரா?

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அத்தோடு இதில் இவர் நடித்த அருள்மொழி வர்மன் கதாப்பாத்திரத்திற்கு ரசிகர்களிடமிருந்து பாராட்டுக் குவிந்து வருகின்றது.


இந்த நிலையில் இவர் அண்மையில் தனது மனைவியுடன் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் அவருடைய மனைவியான ஆர்த்தி தன்னுடைய குழந்தை பிறந்தது குறித்து ஓபனாக பேசியுள்ளார்.அதாவது ஜெயம் ரவி தனக்கு முதல் குழந்தை பிறக்க இருந்த நேரத்தில் தன்னுடைய மனைவியை பத்திரமாக பார்த்துக் கொண்டாராம். ஆர்த்தி வாமிட் எடுக்க வந்தால் கூட தன்னடைய கையில் தாங்கிக் கொள்வாராம். எந்த டைம்ல என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பாராம்.


ஆனால் மூத்த மகன் ஆரவ் பிறக்கும் போது அவர் வெளிநாட்டில் இருந்தாராம். குழந்தை பிறந்திருக்கு என்று சொன்னதும் முதலில் ஆர்த்தி எப்படி இருக்கு என்று தான் கேட்டாராம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய ஜெயம் ரவி ஆர்த்திக்கு இரண்டாவது குழந்தை பிறக்கிற டைம்ல என்னையும் ஆப்ரேஷன் தியேட்டருக்குள்ள கூட்டிட்டு போய்ட்டாங்க. அவங்களுக்கு சிசேரியன் மூலம் தான் குழந்தை கிடைச்சிச்சு.


ஆர்த்திக்கு ஊசி போட்டு சிசேரியன் பண்ண ஆரம்பிச்சதும் நான் மயங்கி விழுந்திட்டேன். அப்பிறம் எங்க அம்மா அடிச்சாங்க நீ எதுக்குடா மயங்கி விழுந்த என்று இந்த டைம்முக்குள்ள சின்னவன் பிறந்திட்டான். அந்த டைம் அந்த மூமன்ஸ் எல்லாம் எப்பவும் மறக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement