பிக்பாஸ் வனிதாவைப் பற்றி பேசக் கூட நான் விரும்பவில்லை-நடிகர் நகுலில் அதிரடிப் பேச்சு

543

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். மேலும் இதுவரைக்கும் 4 சீசன்கள் கடந்த பிக்பாஸ் 5வது சீசன் எப்போது தொடங்கும் என்று ஆவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் நடிகை வனிதா. இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்பதும் தெரிந்ததே. அத்தோடு இவர் இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

மேலும் இதனைத் தொடர்ந்து தற்பொழுது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.இதனிடையில் விஜய்டிவியில் இடம் பெறும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வந்தார். ஆனால் பிபி ஜோடிகளில் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை போட்டுக்கொண்டு வெளியேறினார்.

அங்கு நடந்த பிரச்சனை குறித்து இதுவரை அவர் மட்டுமே பேசி வந்தார்.தற்போது முதன்முறையாக அங்கு என்ன நடந்தது என்பது குறித்து பேசியுள்ளார் நகுல். அவர் கூறுகையில், வனிதாவின் நடனம் குறித்து நாங்கள் தன்மையாக தான் கமெண்ட் கூறினோம்.அவருக்கு மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது பிடிக்கவில்லை. அவரைப் பற்றி பேசக் கூட நான் விரும்பவில்லை.

அம்மன் வேடம் போட்டுக் கொண்டு செட்டில் எங்களைப் பற்றி அவர் அசிங்கமாக பேசியதாக செட்டில் இருந்தவர்கள் சொன்னார்கள். என்னை விடுங்க ரம்யா கிருஷ்ணன் எவ்வளவு பெரிய நடிகை. அவரிடம் வனிதா விஜயகுமார் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதையும் காணலாம்.