அரசியல் வந்த பின் சாதியும்மதமும் நான் பார்ப்பதில்லை : ராமராஜன்

127

ராமராஜன் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர், அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். இவர் 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா படங்களாக அமைந்தன. பின்னர் அரசியல் என தனது பயணம் மாறியமைத்தார்.

நடிகர் ராமராஜன் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும்
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல் பரவியது.

இதுகுறித்து ராமராஜன் கொரோனாவில் இருந்து இப்போது தான் மீண்டுள்ளேன். நான் நடிகனான போதே எம்மதமும் சம்மதம் என்றாகி விட்டேன். மூன்று மதமும் என் மதமே. கோவிலுக்கும் போவேன், தர்காவுக்கும் போவேன். அரசியலிலும் வந்த பின், ஒரு மதத்தில் மட்டும் நான் எப்படி இருக்க முடியும். எல்லாருமே எனக்கு வேண்டும். சாதியும், மதமும் நான் பார்ப்பதில்லை என்றார்.