தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன படங்களில் இன்டஸ்ட்ரி ஹிட் அடித்த படம் என்றால் அது ஜெயிலர் தான். ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளதால் செம்ம குஷியான இப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான சொகுசு காரை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தில் தனது வர்மன் கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பேட்டி ஒன்றில் நெகிழ்ச்சி உடன் பேசி உள்ளார் விநாயகன்.
அதில் தன்னுடைய டிரேட் மார்க் டயலாக்கான மனசிலாயோ எனக்கூறி பேசத்தொடங்கிய விநாயகன், ஜெயிலர் பட அழைப்பு வந்த சமயத்தில் நான் ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக ஒரு 10 நாள் காட்டுக்குள் இருந்தேன். அங்கு டவர் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த படப்பிடிப்பு முடிந்து வந்த உடன் நிறைய மிஸ்டு கால் வந்திருந்ததை பார்த்தேன். இதையடுத்து தான் ரஜினிசார் ஹீரோவாக நடிக்கிற படத்துக்கு வில்லனா நடிக்கனும்னு சொன்னாங்க. ரஜினி சார் படம்னு சொன்னதும் கதையெல்லாம் நான் கேட்கல. பின்னர் நெல்சன் நீங்க தான் முக்கியமான வில்லன்னு சொன்னார்.
வர்மன் கேரக்டர் இந்த அளவுக்கு வந்ததுக்கு ஒரே ஒரு மனுஷன், ஒரே ஒரு பாபா, ரஜினி சார் தான் காரணம். வழக்கமா ஸ்கிரிப்ட் நான் கேட்கமாட்டேன். ஏன்னா பல விஷயங்களால் ஸ்கிரிப்ட் மாறலாம். அதனால் என்னுடைய கேரக்டரைப் பற்றி மட்டும் நெல்சன் சொன்னார். ஆனால் வர்மன் கேரக்டர் இந்த அளவுக்கு ரீச் ஆகும்னு எதிர்பார்க்கல. வீட்டை விட்டு வெளியே போக முடியல. எங்கு போனாலும் வர்மன் தான் சொல்றாங்க, அந்த அளவுக்கு இந்த கேரக்டர் என்னை பாப்புலர் ஆக்கியது. கனவுல கூட இதை நான் எதிர்பார்க்கல.
படத்துல எனக்கு எல்லா சீனுமே பேவரைட் தான். எல்லா சீன் நடிக்கும் போதும் நான் ரொம்ப ஹப்பியா இருந்தேன். இந்த கேரக்டரை எனக்கு கொடுத்த நெல்சனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. ரஜினி சார் இதை நான் மறக்க மாட்டேன். தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கும் ரொம்ப நன்றி” என கூறியுள்ளார்.
Listen News!