• Apr 01 2023

தனிமையை தாங்க முடியாது அவதிப்பட்டேன்; இப்போது பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல் உணர்கிறேன்- விஷால் பட நடிகையின் கண்ணீர்ப் பதிவு

Prema / 1 month ago

Advertisement

Listen News!

விஷாலிற்கு ஜோடியாக 'சிவப்பதிகாரம்' என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மம்தா மோகன்தாஸ். இதனைத் தொடர்ந்து 'குரு என் ஆளு', 'தடையற தாக்க', 'எனிமி' போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். 


இவ்வாறு தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தாலும், மலையாளத்தில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார். மம்தா மோகன் தாஸின் சினிமா மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது எதிர்பாராத விதமாக புற்றுநோயில் சிக்கினார். பின்னர் சிகிச்சைப்பெற்று படிப்படியாக நோய் பாதிப்பில் இருந்து மீண்டார். 


இந்த நிலையில் மம்தா மோகன்தாஸ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது குறித்த அனுபவங்களை கண்ணீருடன் பகிர்ந்திருக்கின்றார். அதாவது "எனக்கு புற்றுநோய் வந்தபோது யாரிடம் சொல்வது என்று தெரியாமல் எனது சினேகிதர்களிடம் தான் முதலில் இதைப் பற்றி தெரிவித்தேன் அவர்கள் எனக்கு தைரியம் கொடுத்தார்கள். 


இருப்பினும் இந்த நோய் வந்ததை அறிந்து தனிமையில் இருட்டு அறையில் உட்கார்ந்து அழுதேன். எப்போதும் கேமரா முன்னால் இருக்கும் நான் தனிமையை தாங்க முடியாமல் பலவாறு அவதிப்பட்டேன். செத்து விடுவோமோ என்று கூடப் பயந்தேன். அதனால் தான் இந்த பிரச்சினையை அனைவருக்கும் பகிரங்கமாக தெரியப்படுத்தினேன்" என்றார். 


மேலும் "மற்றவர்களிடம் கூறிய பின்னர் தான் என் மனது கொஞ்சம் லேசானது. பெரிய பாரத்தை இறக்கி விட்டது போல் உணர்ந்தேன். இதனைத் தொடர்ந்து தான் நான் யாராவது என் உடல் மீது இருக்கின்ற இந்த மச்சங்கள் என்ன என்று கேட்டால் எனது இன்ஸ்ட்டாவை பாருங்கள் என்று முகத்தில் அறைந்த மாதிரி சொல்லி விடுகிறேன்'' எனவும் கூறி இருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement