• Jan 27 2023

என்னுடைய உறுப்புக்கள் தெரியாத வரை என்னை கைது செய்ய முடியாது- திமிராக பேசிய பிரபல சீரியல் நடிகை

Listen News!
stella / 3 weeks ago
image

Advertisement

Listen News!

பாலிவூட் சின்னத்திரை நடிகையும் பிக்பாஸ் பிரபலமாகவும் இருப்பவர் தான் உர்ஃபி ஜாவேத் . இவர் சமீபகாலமாக மேலாடை இன்றி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.மேலாடையின்றி தீபாவளி, நியூ இயர் என பண்டிகை நாட்களுக்கு கூட வீடியோ போட்டிருந்தார்.

உர்ஃபி ஜாவேத் எல்லை மீறி ஆபாசமாக போஸ்ட்டுகள் போட்டு வருவது இளைஞர்களை சீரழித்து வருவதாக பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் சமீபத்தில் பேசிய நிலையில், நீங்க மட்டும் என்ன ஒழுக்கமா எனக் கேட்டு 2018ல் மீடூ புகார்கள் கொழுந்து விட்டு எரிந்த போது சேத்தன் பகத் நடிகைகளுக்கு அனுப்பிய ஆபாச மெசேஜ்களை ஃபார்வேர்ட் செய்து அவரது வாயை அடைத்து விட்டார்.


இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு நடிகை உர்ஃபி ஜாவேத் பொதுவெளியிலும் அரை நிர்வாணமாக ஆடை அணியாமல் சுற்றித் திரிகிறார். அவரை கைது செய்யுங்க என மகாராஷ்ட்ரா பாஜக தலைவர் சித்ரா வாக் மும்பை போலீஸ் கமிஷனரையே நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

இந்த புத்தாண்டை இன்னொரு போலீஸ் புகாருடன் தொடங்குகிறேன். ஏற்கனவே ஒரு அரசியல்வாதி என்மீது இப்படியொரு புகார் அளித்து வீணாகி போன நிலையில், மறுபடியும் ஒரு அரசியல்வாதி தனது அரசியல் பலத்தை வைத்து என்னை அடக்கலாம் என நினைக்கிறார். ஆனால், அவருக்கு தெரியவில்லை சட்டப்படி என்னை கைது செய்ய முடியாது என பதிலடி கொடுத்துள்ளார்.

நிர்வாணம் மற்றும் ஆபாசம் ஒருத்தர் ஒருத்தர் பார்வைக்கு ஏற்றவாறு மாறும். என் மார்பகமோ அல்லது பெண் உறுப்போ தெரியாத வரை என்னை உங்களால் சிறையில் அடைக்க முடியாது. மீடியா அட்டென்ஷனுக்காக மட்டுமே இந்த நபர் இப்படியொரு புகாரை என் மீது கொடுத்துள்ளார் என செம திமிராக பதில் அளித்துள்ளார்


மும்பையில் ஏகப்பட்ட போதைப் பொருள் புழக்கம், பாலியல் தொல்லை புகார்கள், அனுமதியின்றி நடத்தப்படும் ஆபாச நடன பார்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. ஒரு அரசியல்வாதியாக அதையெல்லாம் நீங்கள் முதலில் தடுக்கலாமே என்றும் அட்வைஸ் சொல்லி இருக்கிறார் உர்ஃபி ஜாவேத் 


Advertisement

Advertisement

Advertisement