• Mar 27 2023

ரொம்ப வருத்தமா இருக்கு அதனால தான் வட சென்னை படம் பார்க்கல- மனம் நொந்து பேசிய விஜய்சேதுபதி

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் தான் விஜய் சேதுபதி . இவர் கதாநாயகாக மட்டுமல்லாது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இறுதியா இவர் நடிப்பில் மாமனிதன், DSP ஆகிய படங்கள் வெளியானது. 

விஜய் சேதுபதி நடித்து இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர்,  விடுதலை, மும்பைக்கர், பிசாசு2, ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.சமீபத்தில் ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் புகழ் பெற்ற இயக்குநர்களான ராஜ் & டிகே இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த Farzi வெப் சீரிஸ், அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, "வட சென்னை படத்தில் நடிக்க மிஸ் பண்ணிட்டேன். நான் அந்த படத்தை தவற விட்டதற்காக வருந்தி இருக்கேன். 


அதனால் வட சென்னை படத்தை பார்க்கவில்லை. பார்த்தால் ரொம்ப வருத்தப்படுவேன்னு பார்க்கல. பாடல் காட்சிகள் மட்டும் பார்த்து இருக்கேன். இதை வெற்றிமாறன் சார்ட்டையே சொல்லிருக்கேன்" என விஜய் சேதுபதி பேசினார் எனபதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement

Advertisement