• Apr 01 2023

அப்பிடி நடிக்கவும் நான் ரெடியாத் தான் இருக்கிறேன்- நச்சுன்னு பதில் கொடுத்த எதிர் நீச்சல் ஜான்சி ராணி

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


சன்டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஜான்சி ராணி என்னும் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் காயத்திரி. இவருக்கு இந்த சீரியல் மூலம் நல்லதொரு அடையாளத்தைக் கொடுத்துள்ளது.

மேலும் இவர் அயலி மற்றும் டாடா ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருந்தார். அடுத்ததாக வணங்கான படத்தில் நடிப்பதற்கு பாலா கேட்டதாகவும் அண்மையில் ஓர் பேட்டியில் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் இவர் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில் கிளாமராக நடிப்பீங்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் கண்டிப்பாக நடிப்பேன். முக்கியமான கதாப்பாத்திரம் அதற்கு கிளாமராக நடிக்கணும் என்றால் கண்டிப்பா நடிப்பேன் என்று கூறியுள்ளார்.


அத்தோடு இவர் நெக்கட்டிவ் ரோல்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருவதோடு தன்னுடைய கம்பீரமான தோற்றத்தினால் வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement

Advertisement