• Mar 29 2024

அப்படி ஒருத்தரைத் தான் முக்கியமாக தேடிட்டு இருக்கிறேன்- வெளிப்படையாகக் கூறிய நடிகர் உதயநிதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார்.இப்படம் வருகின்ற 18ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தில் நடித்த உதயநிதி மற்றும் நிதி அகர்வால் இருவரும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, "நெஞ்சுக்கு நீதி பண்ணி விட்டு அதன் பின்னர் தான் 'கலகத் தலைவன்' படத்திற்கு வந்தேன்.


 படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள். அதில், எட்டு வருடங்களுக்கு முன்பு திருவும் மகிழும் சந்தித்திருப்பார்கள்.அதன்பிறகு எட்டு வருடத்திற்கு பின்னர் சந்திப்பார்கள். அதனால் தோற்றத்தில் சிறிது மாற்றம் தேவைப்பட்டது. 

அதனால் இந்த இடைவேளை தேவைப்பட்டது. நான் இயக்குநர்களை தேடிச் செல்கிறேன். சில கதைகள் நம்மளை தேடி வரும். நான் இப்போது வித்தியாசமான இயக்குநர்கள், வித்தியாசமான கதைக்களம் அதை தேடிக்கொண்டிருக்கிறேன்" என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement